உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றபோது எடுத்தபடம். 

தாராபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-19 06:52 GMT   |   Update On 2022-07-19 12:53 GMT
  • பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
  • தாராபுரம் தேன்மலர் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தாராபுரம்:

தாராபுரத்தை பிளாஸ்டிக் இல்லாத தூய்மை நகராக மாற்ற பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் கொடியரசு பேரணியை துவக்கி வைத்தார் .இதில் தாராபுரம் தேன்மலர் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியானது தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக பூக்கடை கார்னர் சர்ச் வீதி ,தாலுகா அலுவலகம் வரை சென்றது. பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். 

Tags:    

Similar News