உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

கும்பாபிஷேகத்தையொட்டி சாமராயபட்டி கோவிலில் 2 நாட்கள் அன்னதானம்

Published On 2022-06-12 08:46 GMT   |   Update On 2022-06-12 08:46 GMT
  • நாளை 13-ந்தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடக்கிறது.
  • ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் தாலுகா சாமராயபட்டியில், பழமையான விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, மகா கும்பாபிேஷக விழா மங்கள இசை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது. நேற்றுமாலை6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கும்ப ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் முதற்கால யாக பூஜை நடந்தது.

இன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11மணிக்குவிமான கலசம் வைத்தல், மதியம்2 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிநடைபெற்றது. மாலை,4மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை 13-ந்தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடக்கிறது.

காலை 5 மணிக்கு மேல் 5:30 மணிக்குள், விமானங்கள் சம கால கும்பாபிேஷகமும், 5:30 முதல் 6 மணிக்குள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, தச தானம், தச தரிசனம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. கும்பாபிேஷக விழாவையொட்டி இன்று மாலை முதல், நாளை மாலை வரை தொடர் அன்னதானம் நடக்கிறது.

Tags:    

Similar News