உள்ளூர் செய்திகள்
ஜப்பானிய மலர் கண்காட்சி.

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., மகளிர் கல்லூரியில் ஜப்பானிய மலர் அலங்கரிப்பு கண்காட்சி

Published On 2023-10-20 11:00 GMT   |   Update On 2023-10-20 11:00 GMT
  • போன்சாய் கிளப்பின் அமைப்பு பற்றியும் வெளிநாடுகளில் இருக்கும் போன்சாய் மரங்களின் தன்மை குறித்தும் விரிவாக விளக்கினார்.
  • கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். முடிவில் பத்மாபாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

உடுமலை:

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி , வாமன் விருக்ஷா போன்சாய் கிளப் சார்பில் இயற்கைக்குள் சிறிய இயற்கை மற்றும் இக்கபானாவின் ஜப்பானிய மலர் அலங்கரிப்பு பற்றிய கலை கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சி ஜி.வி.ஜி., மாநாட்டு அரங்கம் 1 ல் நடைபெற்றது.இந்த கண்காட்சியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார்.ஆலோசகர் மற்றும் இயக்குநர் மஞ்சுளா வரவேற்று பேசினார்.போன்சாய் கிளப்பின் தலைவர் ஸ்ரீமதி மீனா குருசாமி சிறப்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர் போன்சாய் கிளப்பின் அமைப்பு பற்றியும் வெளிநாடுகளில் இருக்கும் போன்சாய் மரங்களின் தன்மை குறித்தும் விரிவாக விளக்கினார்.

மேலும் போன்சாய் மரங்கள் அமைதி, சமாதானம்,நற்குணங்கள், நல்ல எண்ணங்களை பிரதிபலிக்கின்றன என்று கூறியதுடன் போன்சாய் மரத்தின் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.அதைத் தொடர்ந்து போன்சாய், சாய்கேய்,சூசேகி வகைகள் மற்றும் இக்கபானா ஜப்பானிய மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அரங்குகளை விஜயகுமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.அப்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்,கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். முடிவில் பத்மாபாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.  

Tags:    

Similar News