உள்ளூர் செய்திகள்

ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் பள்ளியில் மாணவர் மன்றம் தொடக்க விழா நடைபெற்ற காட்சி.

ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் பள்ளியில் மாணவர் மன்றம் தொடக்க விழா

Published On 2022-07-03 08:08 GMT   |   Update On 2022-07-03 08:08 GMT
  • மாணவர்கள் மறைமுக தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
  • ரேவதி மருத்துவமனையின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திருப்பூர்:

திருப்பூர் காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் மன்ற தொடக்க விழா நடந்தது. முன்னதாக மாணவர் மன்றத்திற்கான புதிய நிர்வாகிகளை 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்கள் மறைமுக தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.

அதன்படி மாணவர் மன்ற தலைவர்களாக ஆகாஸ், கீர்த்தனா, துணைத்தலைவர்களாக முகமதுருசைல், ரிதுமிகா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் பல்வேறு அணியின் செயலர்கள், துணை செயலர்கள், இணை செயலர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

பள்ளியின் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஏ.வி. பி. கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகே யன் முன்னிலை வகித்தார். ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் முதல்வர் ஜி.பிரமோதினி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக திருப்பூர் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவரும், ரேவதி மருத்துவமனையின் தலைவருமான ஈஸ்வரமூர்த்தி மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முடிவில் பள்ளியின் பாரதி மன்ற இணைசெயலர் மாணவிரிதன்யா நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வி. மோகனா, கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ். நித்யா ஆகியோருடன் இணைந்து முன்னாள் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News