உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உர மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2023-05-21 05:31 GMT   |   Update On 2023-05-21 05:31 GMT
  • தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
  • கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தென்னை நோய் தாக்குதல் மற்றும் தடுக்கும் வழிமுறை குறித்து கையேடு வழங்கப்பட்டது.

மூலனூர்:

மூலனூரில் வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தென்னையை தாக்கும் நோய்கள், பூச்சி கட்டுப்படுத்துதல் மற்றும் உர மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தென்னை பராமரிப்பு மற்றும் வழிமுறைகள் குறித்து, வேளாண் பேராசிரியர் ராஜமாணிக்கம் பேசியதாவது:-

தென்னையில் ஏற்படும் கருந்தலை புழுக்கள், கூண்டு புழுக்கள், கரும் பூஞ்சானம், இலை அழுகல், இலையின் ஓரங்களில் கருகி காணப்படுதல், இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதால் மற்றும் இலைகள் உள் நோக்கி வளைதல் போன்ற நோய்களை கண்டறிதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கப்படுகிறது.

மேலும் தென்னையில் வாடல் நோயின் வகைகளான தஞ்சாவூர் வாடல் நோய், கேரளா வாடல் நோய்களுக்கான வேறுபாடுகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தென்னை நடவு செய்யும் போது, பெரும்பாலான விவசாயிகள் இரண்டு அடி குழி எடுத்து நடவு செய்கின்றனர். இவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் வேகமாக காற்று வீசும் பொழுது தென்னை சாய்ந்து விழ அதிக வாய்ப்புள்ளது.எனவே 3 அடி குழி தோண்டி, 15 முதல் 30 நாட்களுக்கு பின் தென்னை நடவு செய்ய வேண்டும். குழி தோண்டிய நாளே நடவு செய்தால் மண்ணின் உஷ்ணத்துக்கு தென்னங்கன்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தென்னை நோய் தாக்குதல் மற்றும் தடுக்கும் வழிமுறை குறித்து கையேடு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News