உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பிறப்பு- இறப்பு பதிவுகளை 'டிஜிட்டல்' மயமாக்கும் பணிகள் தீவிரம்

Published On 2022-07-24 05:40 GMT   |   Update On 2022-07-24 05:40 GMT
  • சாப்ட்வேர்களை பயன்படுத்தி பிறப்பு, இறப்பு பதிவுகளை பராமரித்தனர்.
  • இணையதள முகவரியில் இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திருப்பூர்:

மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தில் பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்கள் பெறுவதும், டிஜிட்டல் மயமாகியுள்ளது. கடந்த 2018 ஜனவரி 1 முதல் பிறப்பு, இறப்புகள் அனைத்தும் இணையதளத்தில் அப்லோடு செய்து, பொதுமக்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 4½ ஆண்டுகளாக, இதே நடைமுறை அமலில் உள்ளது.பழைய பிறப்பு, இறப்பு பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்து, சான்றிதழ் வழங்கியுள்ள பதிவுகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

கடந்த 2013 முதல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வேறு வகை சாப்ட்வேர்களை பயன்படுத்தி பிறப்பு, இறப்பு பதிவுகளை பராமரித்தனர். இந்நிலையில் 2013 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு விவரங்களையும் புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 2013 முதல் 2017 வரையிலான பிறப்பு, இறப்பு பதிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைந்த பின் 2013 முதல் நிகழ்ந்த, பிறப்பு, இறப்புகளுக்கான பதிவு சான்றிதழை, crstn.org என்ற இணையதள முகவரியில் இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என்றனர்.

Tags:    

Similar News