சொட்டுநீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
- குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது.
- குடிமங்கலம் பகுதியில் தற்போது குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் குடிமங்கலம் குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல் அவதிப்படுவதை தடுக்கும் வகையில் சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் குடிமங்கலம் பகுதியில் தற்போது குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.குடிமங்கலம் பகுதியில் ரெட் லேடி ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இது நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்டது என்பதால் விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பப்பாளி பழங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று பப்பாளிகளை அறுவடை செய்து கொள்கின்றனர் இதுகுறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி கூறியதாவது. கூடுதல் லாபம் பப்பாளி ரகத்தின் வயது வயது 22 மாதங்கள் ஆகும்குடிமங்கலம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.பப்பாளி கன்றுகளை 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்யவேண்டும்..பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது மேலும் மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனைகள் குறைவாகவே உள்ளது..பப்பாளி சாகுபடி செய்த 8 மாதங்களில் இருந்து அறுவடைக்கு தயாராகும். பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்றாலும் பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. பப்பாளி செடியின் வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்காத அளவில் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பப்பாளி 8மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து 14மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.வியாபாரிகள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து பழங்களை அறுவடை செய்து கொள்வதால் விவசாயிகளுக்கு செலவு குறைவாகவே உள்ளது. பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார்