உள்ளூர் செய்திகள்

திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஆடி கிருத்திகை வழிபாடு திருப்பூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2022-07-23 09:29 GMT   |   Update On 2022-07-23 09:31 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர்.

திருப்பூர்:

ஆடிமாத கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், ஊத்துக்குளி கயித்தமலை கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

ஆறுமுகத்தானுக்கு பன்னீர், தேன், திணை மாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார்.

முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர். மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது. 

Tags:    

Similar News