உள்ளூர் செய்திகள்
அத்திக்கடவு, அவிநாசி திட்டத்திற்கு துணை திட்டம் ஏற்படுத்த வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
- கடந்த சட்டசபை தேர்தலின் போது இத்திட்டத்தில் விடுபட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
- திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
திருப்பூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி கலெக்டருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 மாவட்டங்களில் பெரும்பாலான குளம், குட்டைகள் இணைக்கப்பட்டு திட்டம் பெருமளவு நிறைவடையும் நிலையில் உள்ளது.கடந்த சட்டசபை தேர்தலின் போது இத்திட்டத்தில் விடுபட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்வு செய்யப்பட்ட குளம் குட்டைகள் தவிர விடுபட்ட மற்றவற்றையும் இத்திட்டத்தில் இணைக்கும் வகையில் துணைத் திட்டம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.