உள்ளூர் செய்திகள்
விடுபட்ட கட்டிடங்களுக்கு வரி விதிக்க குழு அமைப்பு - காங்கயம் நகராட்சி அறிவிப்பு
- கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும்.
- கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும்.
காங்கயம்
காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடம் மற்றும் ஏற்கனவே வரிவிதிப்பு செய்யப்பட்டு அதன் பின் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும். அவ்வாறு வரியினங்களை செலுத்த முன் வராத பட்சத்தில் குழு ஆய்வு செய்யும்போது கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் 6 ஆண்டுகளுக்கான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.