உள்ளூர் செய்திகள்
பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 ஊதியம் வழங்கப்பட வேண்டும் - தொ.மு.ச. மாவட்ட பொதுச்செயலாளர் ராமதாஸ் கோரிக்கை
- ஊதிய நிர்ணயக்குழு உறுப்பினருமான நெடுஞ்செழியன், திருப்பூர் தொழிற்சங்க நிர்வாகி ரங்கசாமி, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பஞ்சாலை தொழிலாளர் ஊதிய நிர்ணய குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர்:
பஞ்சாலை தொழிலாளர் ஊதிய நிர்ணய குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாலை தொ.மு.ச. மாவட்ட பொதுச்செயலாளர் கொ.ராமதாஸ் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதன்படி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ராமதாஸ் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இதில் தொ.மு.ச. மாநில பேரவை செயற்குழு உறுப்பினரும், ஊதிய நிர்ணயக்குழு உறுப்பினருமான நெடுஞ்செழியன், திருப்பூர் தொழிற்சங்க நிர்வாகி ரங்கசாமி, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.