மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
- கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்,
- கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 103 மகளிர் சுய குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 31 நபர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரத்து 541 மதிப்பிலான 3 நபர்களுக்கு பேட்டரி வீல் சேர், 9 நபர்களுக்கு செல்போன், 15 நபர்களுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 நபர்களுக்கு வழங்கினார்.
முன்னதாக வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசிமுத்துக்குமார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே. ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வருவாய்த்துறையினர், கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.