கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
- எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
- மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி, தேசிய ஒற்றுமை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல் புகழை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய்பட்டேலின் தொலைநோக்குப்பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர் வினைப்பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.