உள்ளூர் செய்திகள்
அவிநாசியில் தீ தடுப்பு செயல்முறை விளக்க பயிற்சி
- விபத்து தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
- இப்பயிற்சியை நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா்கள் ஒருங்கிணைத்தனா்.
திருப்பூர்:
தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மேலாண்மை குறித்த செயல்முறை விளக்க பயிற்சி அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இதில் மழை காலங்கள், கட்டட இடிபாடுகள், விபத்து உள்ளிட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, வெள்ளக்காலங்களில் மின்சாதன பொருட்களை கையாளக் கூடாது, வீடு மற்றும் நிறுவனங்களில் எரிவாயு கசிவு ஏற்படும்போது செய்ய வேண்டியவை, விபத்து தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பேரிடா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.இப்பயிற்சியை நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா்கள் ஒருங்கிணைத்தனா்.