மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்
- மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
- சாமிநாதன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பெருமாநல்லூர்:
ஊத்துக்குளி தாலுகா, மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து சிவசக்தி நகர், எம்.எஸ்.நகர், பொன்னியகவுண்டனூர், செம்பாவள்ளம், ஆர்.எஸ்.புதூர் வழியாக காங்கயம் சாலை வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த சாலை அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது கிராம சாலைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை மறுசீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் என்.பிரபு தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.