உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாநகராட்சியில் கணினி வரி வசூல் மையம் நாளை வரை செயல்படாது
- இறப்பு பதிவு சான்றிதழ், கட்டிட அனுமதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கும் வசூல் பணி நடைபெறாது.
- கணினி வரி வசூல் மையங்களில் வரியினங்களை செலுத்தி பயன் பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
சென்னை, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் மென்பொருள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 29-ந்தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும்4 மண்டலத்திலும் உள்ள கணினி வரி வசூல் மையத்தில் பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்கள், குத்தகை இனங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சான்றிதழ், கட்டிட அனுமதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கும் வசூல் பணி நடைபெறாது.
30-12-2022 (வெள்ளிக்கிழமை) முதல் பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் உள்ள கணினி வரி வசூல் மையங்களில் வரியினங்களை செலுத்தி பயன் பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.