தீக்காயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
- மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
- முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உடுமலை:
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.எஸ்.எஸ் ., காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மல்லிகா.இவர்களுக்கு திவ்யா மற்றும் பிரசன்னா என்ற குழந்தைகள் உள்ளனர்.மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மல்லிகா தனது கணவர் செல்வராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இந்தநிலையில் மல்லிகாவை தீக்காயத்துடன் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.அங்கு முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் மல்லிகா மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக செல்வராஜ் கூறினார்.அதை மறுத்த மல்லிகா தனது கணவர் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்ததாக கூறினார்.இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.