உள்ளூர் செய்திகள்

குடிநீர் திட்டப்பணிகளை மேயர் ஆய்வு செய்தபோது எடுத்தபடம். 

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் 4-வது குடிநீர் திட்ட பணிகளை மேயர் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவு

Published On 2023-05-03 07:52 GMT   |   Update On 2023-05-03 07:52 GMT
  • 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
  • மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில்

மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளு டன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியும், பணிகளை நேரடியாக சென்றும் ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வெள்ளியங்காடு நால்ரோடு மற்றும் 60 அடி சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.

அப்போது முடிக்க படாத பணிகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News