பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு
- கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.
- துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.
பல்லடம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பல்லடம் தாசில்தார் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் கூறியதாவது: -
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பேலட் யூனிட் 3,280, கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. இவைகளில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியாக பிரிக்கப்பட்டு வருகின்றன. பழுது பார்த்து அவைகளை சரிசெய்ய பெங்களூர் பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.மற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.