உள்ளூர் செய்திகள்

வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய காட்சி.

பல்லடம் அருகே வேருடன் வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

Published On 2023-05-14 06:16 GMT   |   Update On 2023-05-14 06:16 GMT
  • 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்க ப்பட்டன.
  • வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது

திருப்பூர்:

பல்லடம் அடுத்த, மாதப்பூரை சேர்ந்தவர் வடிவேல், (42)விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே, 80 ஆண்டுகள் பழமையான பனை மரங்கள் இருந்தன. இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே வழித்தட பிரச்னையை தொடர்ந்து, 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்க ப்பட்டன. இது குறித்து வடிவேல் அளித்த புகார் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வடிவேல் மற்றும் இவரது உறவினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் ஒப்பாரி வைத்தனர். 'மண்ணைக் காக்கும் பனை மரங்களை அழிக்காதே', 'பனை மரத்துக்கு அஞ்சலி' என்பது உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் கூறுகையில், '80 ஆண்டுகளாக இருந்த பனை மரங்களை, வழித்தட பிரச்னைக்காக வெட்டி வீழ்த்தியுள்ளனர். இன்றைய சூழலில், பெற்ற குழந்தைகள் போல் மரங்களை வளர்க்க வேண்டியுள்ளது. வெட்ட ப்பட்ட பனை மரங்களுக்கு இணையாக மரங்கள் நட வேண்டும். மரங்களை வெட்டியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறதுஸ என்றனர்.

Tags:    

Similar News