நீட் தேர்வு - திருப்பூரில் மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்
- நீட் தேர்வு எழுதுவதற்காக மையங்களில் மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
- இன்று மதியம் தேர்வு தொடங்கியது.
திருப்பூர்:
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படு கின்றன.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வை 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுதுகிறார் கள். இந்த வருடம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 497 நகரங்களில் தேர்வை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது.
தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு முன்பாக ஒரு நிமிடத்திற்கு முன்னதாக மாணவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். தேர்வு எழுதச் செல்லும் மாணவ-மாணவி கள் பல்வேறு கட்டுப்பாடு களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, உள்பட 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 59 மையங்களில் தேர்வு நடக்கிறது.
நீட் தேர்வு எழுதுவதற்காக மையங்களில் மாணவ-மாணவிகள் குவிந்தனர். காலையிலேயே பெற்றோரு டன் மாணவர்கள் மையங் களின் நுழைவு வாயிலில் காத்திருந்தனர். பின்னர் காலை 11.40 மணி முதல் தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப் பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 3 ஆயிரத்து 900 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
திருப்பூர் மண்டலத்துக்குட்பட்ட கே.எம்.சி., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, விஜயமங்கலம் சசூரி என்ஜினீயரிங் கல்லூரி, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி, கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 5 மையங்களும், கோவை மண்டல கட்டுப்பாட்டின்கீழ், கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும் என 6 மையங்களில் இன்று மதியம் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வை எழுதினர்.