தூய்மைபணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆணை
- தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 714 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் 1 நபருக்கு தூய்மை பணியின் போது ஒரு கை பாதிப்படைந்த நிலையில் நலவாரியத்தின்கீழ் நிவாரண நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் 8 தூய்மைபணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்டஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மேளாலர் (தாட்கோ) ரஞ்சித்குமார், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்க உபதலைவர் கனிமொழி பத்மநாபன், தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.