பயோ டீசல் தயாரிப்புக்கு பயன்படுத்திய எண்ணையை வழங்க வேண்டும்- உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
- சமீப ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் பாஸ்ட் புட் தயாரித்து விற்பது மற்றும் ஓட்டல், டீக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- பயன்படுத்தி எண்ணெயை பயோ டீசல் தயாரிப்புக்கென உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
சமீப ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் பாஸ்ட் புட் தயாரித்து விற்பது மற்றும் ஓட்டல், டீக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சில நேரங்களில் உணவின் தரமும் கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே உணவு தரத்தை உறுதிப்படுத்த, உணவு பாதுகாப்பு துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் உணவு பதார்த்தம் தயாரிக்க மீண்டும், மீண்டும் பயன்படுத்திய எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என, அறிவுறுத்தி வருகின்றனர்.அவ்வாறு பயன்படுத்தி எண்ணெயை பயோ டீசல் தயாரிப்புக்கென உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் இத்திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பெரும்பாலான கடைக்காரர்கள் பயன்படுத்திய எண்ணெய்யை உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க தயங்குகின்றனர்.இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர், ஆங்காங்கே ஓட்டல் உரிமையாளர், தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.