உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தாராபுரம்-உடுமலையை குளிர்வித்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2023-04-24 07:01 GMT   |   Update On 2023-04-24 07:02 GMT
  • உடுமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வந்தது.
  • மெல்ல மெல்ல மழை தீவிரமடைந்து 4 மணியளவில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்தது.

 தாராபுரம்:

தாராபுரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்த நிலையில் நேற்று மதியம் வரை வழக்கம் போல் வெயில் வெளுத்து வாங்கியது. அதைத் தொடர்ந்து வானில் கருமேகங்கள் ஒன்று கூடியதால் சூறாவளி காற்றுடன் 3மணிக்கு இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் பாய்ந்து ஓடியது. இதனால் தாராபுரம் வட்டார பகுதியான அலங்கியம், காளி பாளையம், சத்தரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதியில் குளிர்ச்சி நிலவியது.இதனால் தாராபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உடுமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் மழைப்பொழிவை எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்த சூழலில் நேற்று மதியம் 2.45 மணியளவில் வானம் இருள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. மெல்ல மெல்ல மழை தீவிரமடைந்து 4 மணியளவில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சில்லென்ற காற்றுடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News