உள்ளூர் செய்திகள் (District)

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியபோது எடுத்தபடம்.

பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவு

Published On 2023-03-08 07:20 GMT   |   Update On 2023-03-08 07:21 GMT
  • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததற்காக, கடனுதவி வழங்கப்பட்டது.
  • இயக்குனர் லட்சுமணன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

 திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அனைத்து திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், அனைத்து துறைகளில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்க ளின் தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பான முறையில், விரைவாக மேற்கொண்டு, திருப்பூர் மாவட்டத்தை முன்னோடியாக திகழச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததற்காக, கடனுதவி வழங்கப்பட்டது.இதில் டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸி ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News