திருப்பூர் வழியாக ஷீரடிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
- கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் ெரயில் சேவை வருகிற 26ந்தேதி இயக்கப்படவுள்ளதாக சேலம் ெரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
- மறுமார்க்கத்தில் ஷீரடி- கோவை வடக்கு (06904) ெரயில் வருகிற 29-ந் தேதி மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு வருகிற 30-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 7:15மணிக்கு வந்தடையும்.
திருப்பூர்:
கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் ெரயில் சேவை வருகிற 26ந்தேதி இயக்கப்படவுள்ளதாக சேலம் ெரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பாரத் கவுரவ் ெரயில் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு- சாய்நகர் ஷீரடி (06903) பாரத் கவுரவ் ெரயில் வருகிற 26-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு வரும் 28-ந் தேதி காலை 11:10 மணிக்கு ஷீரடி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஷீரடி- கோவை வடக்கு (06904) ெரயில் வருகிற 29-ந் தேதி மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு வருகிற 30-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 7:15மணிக்கு வந்தடையும்.
இந்த ெரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், தர்மாவரம், குண்டக்கல், மந்தராலயம் சாலை, ராய்ச்சூர், வாடி, சோலாப்பூர், டான்ட் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.