உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - திருப்பூர் ரெயில், பஸ் நிலையங்களில் ஹிந்தி, தமிழில் எச்சரிக்கும் போலீசார்

Published On 2023-03-08 07:43 GMT   |   Update On 2023-03-08 07:44 GMT
  • வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
  • பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர்.

திருப்பூர்:

வட மாநில தொழிலா ளர்கள், தமிழர்களால் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோவை, சிலர் சமூக வலைதளங்களில் பரப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இச்சூழலில், பல்வேறு மாநில தொழிலாளர்கள், மக்கள் வந்து செல்லும் திருப்பூர் ரெயில், பஸ் நிலை யங்களில், பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர். அதில் 'வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்; அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையை தூண்டும் வகையில், சித்திரிக்கப்பட்ட வீடியோவை, யாரும் பகிரக்கூடாது. அவ்வாறு பகிர்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News