தேர்ச்சி சதவீதம் குறைந்த பாடங்கள் குறித்து ஆய்வு
- இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தேர்ச்சி சதவீதம் குறைந்த பாடங்கள், பள்ளிகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதுசார்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், அதற்கான காரணத்தை உரிய ஆசிரியரே குறிப்பிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தீர்வையும், அந்த ஆசிரியரே தெரிவிக்க வேண்டும். அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.