சிவன்மலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
- திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
காங்கயம்:
காங்கயம் சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 14-ந் தேதி தொடங்கியது.விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.கோவிலில் நேற்று முன்தினம் நடந்த சூரசம்ஹாரத்தில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். நேற்று முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருகல்யாண வைபவம் நடந்தது.திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மந்திரங்கள் ஓதப்பட்டு, ேஹாமம் வளர்க்கப்பட்டு, மாங்கல்ய வழிபாடு செய்யப்பட்டது. திருக்கல்யாண வைபவ முடிவில் முருகப் பெருமானுக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடைசியாக பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்தனர்.திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் ஏற்பாடுகளை சிவன்மலை கந்த சஷ்டி விரத குழுவினர் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காங்கயம் காவல் துறையினர் ஈடுபட்டனர்.