திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் பரிசளிப்பு விழா
- மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
- முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.
திருப்பூர்:
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். 2021-22ம் கல்வி ஆண்டில் பாடவாரியாக 100 / 100மதிப்பெண்கள் பெற்ற 78 மாணவர்களுக்கு பாரத் டையிங் முருகநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2022 -23 நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களில் வகுப்புவாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள், தந்தையர் தினம், நிறுவனர் தினம், குழந்தைகள் தினம், ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினம், தீரன் சின்னமலை பிறந்த தினம் போன்ற விழாக்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெல்வின் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பாபு அந்தோணி, ஆதவன் காட்டன்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பூபதி சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினர். ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர் தலைவர் ரவீந்திரன் காமாட்சி, ஏ.வி.பி. டிரஸ்ட் பிரதாப், நட்ராஜ் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். விழாவில் 1060 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.