உள்ளூர் செய்திகள்
கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு
தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் இம்மாதம் 15-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்
திருப்பூர்:
தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் இம்மாதம் 15-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் கட்டாயம் ஆதார் இணைத்திருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள், இ-சேவை மையம் மூலமாக சாதி, வருமான சான்றிதழ் விண்ணப்பித்து பெற வேண்டும்.
ஜாதிசான்றிதழ், ஆதார், குடும்ப வருமானம் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஆவணங்களை முழுமையாக பெற்று தகுதியானவர் விபரங்களை தெரிவு செய்து வருகிற 15-ந் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.