உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்த 'புத்தக பூங்கொத்து திட்டம்' - மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

Published On 2023-05-10 06:39 GMT   |   Update On 2023-05-10 06:40 GMT
  • பள்ளிக்குழந்தைகளின் புத்தக அறிவை அதிகரிக்க புத்தக பூங்கொத்து திட்டத்தை தி.மு.க., அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.
  • வகுப்புகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

உடுமலை:

உடுமலையில் 300க்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. பள்ளிக்குழந்தைகளின் புத்தக அறிவை அதிகரிக்க புத்தக பூங்கொத்து திட்டத்தை தி.மு.க., அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப கதை மற்றும் நாடக புத்தகங்கள் அரசின் சார்பில் வழங்கப்படும். புதிர் வினாக்கள், விடுகதைகள் என மாணவர்களின் சிந்தனையை தூண்டும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த புத்தகங்களை வகுப்பறைகளில் மாணவர்களின் கண்பார்வையில் இருக்கும் படி கொத்துக்களாக தொங்க விட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் அவர்களது பிறந்தநாளன்று, இனிப்புகள் வழங்குவதற்கு மாற்றாக புதுமையான புத்தகத்தை அந்த வகுப்புக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு வகுப்புகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வராத நேரத்தில் பாடஇடைவேளை நன்னெறி வகுப்புகளின்போது, மாணவர்கள் அவர்களாகவே புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.புத்தகங்களை படித்து புதிர்போட்டு விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குழந்தைகளின் வாசிப்புத்திறனும் மேம்பட்டது. இத்தகைய திட்டம் தற்போது அரசு பள்ளிகளில் இல்லாமல் போய்விட்டது.வரும் புதிய கல்வியாண்டிலாவது இத்திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.

இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இத்திட்டத்தால் குழந்தைகளும் ஆர்வத்தோடு, அவர்களாகவே அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்தனர். இதனால் வாசிப்புத்திறன் மட்டுமின்றி அடிப்படை கணக்குகளையும் அறிந்து கொண்டனர்.அப்போது திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அடிக்கடி அறிக்கை கேட்கப்படும். மாணவர்களின் புத்தக வாசிப்பு குறித்து கல்வித்துறையின் வாயிலாக ஆய்வு நடத்தப்படும். அதனால் திட்டத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது என்றார்.

Tags:    

Similar News