உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-12-22 06:24 GMT   |   Update On 2022-12-22 06:24 GMT
  • பயிற்சியாளருக்கு 11 மாதத்துக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும்.
  • தேசிய அளவில் சாதனை படைத்து 40 வயதுக்கு உட்பட்ட தடகள வீரர், வீராங்கனைகளில் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

திருப்பூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான எஸ்.டி.ஏ.டி. விளையாடு இந்தியா மாவட்ட மையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி தினமும் அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்க, தேசிய அளவில் சாதனை படைத்து 40 வயதுக்கு உட்பட்ட தடகள வீரர், வீராங்கனைகளில் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பிப்பவர்கள் திருப்பூரை சேர்ந்தவராக குறைந்தது 5 ஆண்டுகளாக இங்கு வசிப்பவராக இருக்க வேண்டும். சர்வதேச போட்டி, தேசிய போட்டியில் பதக்கம் பெற்றவரோ, அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராக, சர்வதேச போட்டிகளில், சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராக இருக்க வேண்டும். பயிற்சியாளருக்கு 11 மாதத்துக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும்.

இதற்கான விண்ணப்பத்தை www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வருகிற 3-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதிவாய்ந்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு திருப்பூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.இந்த தகவலை மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News