மின் இணைப்பு குளறுபடிகளை நிவா்த்தி செய்ய வேண்டும் - அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பு மனு
- நுகா்வோா்களின் மாதாந்திர மின் கட்டணத்துடன் சோ்த்து செலுத்தும் விதமாக மின்சார விதி உள்ளது.
- தற்காலிக மின்சார இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்யப்படாமல் இருப்பதால், மின்சார கட்டணம் மிக அதிகமாக வருகிறது.
திருப்பூர்:
திருப்பூா் குமாா் நகரில் உள்ள மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் செயற்பொறியாளா் சண்முகசுந்தரம் தலைமையில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், மின்சார வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.
இதில் திருப்பூா் அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பு பொதுச் செயலாளா் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
மின்சார இணைப்புகளுக்கு வழங்கியுள்ள மின் பழுவை விட கூடுதலாக பயன்படுத்தினால் அதற்கான கூடுதல் கட்டணத்தை மின்சார வாரிய இணைதளம் மூலமாக பதிவேற்றம் செய்து, நுகா்வோா்களின் மாதாந்திர மின் கட்டணத்துடன் சோ்த்து செலுத்தும் விதமாக மின்சார விதி உள்ளது.
ஆனால், திருப்பூா் பகுதிகளில் உள்ள பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட இடங்களில் உள்ள இணைப்புகளில் கூடுதலாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக ஊழியா்களை நுகா்வோா்களை தொடா்பு கொண்டு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டுவதுடன், நுகா்வோா்களிடம் தவறான தகவல்களை தெரிவித்து அதிக பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது குறித்து தீா்வு காண வேண்டும்.
திருப்பூா் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு தற்காலிக மின்சார இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்யப்படாமல் இருப்பதால், மின்சார கட்டணம் மிக அதிகமாக வருகிறது. எனவே, இதில் உள்ள குளறுபடிகளை கலைந்து தற்காலிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்ய விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக வீட்டு மின் இணைப்பாக மாற்றம் செய்ய சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது