உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடி பெருவிழா - நாளை தொடக்கம்

Published On 2022-07-21 07:23 GMT   |   Update On 2022-07-21 07:24 GMT
  • திரவியங்கள் சமர்ப்பணம் மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
  • ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு சேஷாட அபிஷேகம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

உடுமலை:

உடுமலையின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி பெருவிழா நடைபெறுவது வழக்கம் இதன்படி நாளை 22 ந்தேதி ஆடிப்பெரு விழா தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் ஆடி வெள்ளிக்கிழமையான வரும் 22ந்தேதி காலை 11 மணிக்கு திருமஞ்சனம் உச்சிக்கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.23ந்தேதி ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை ,28 ந்தேதி சர்வ ஆடி அமாவாசையை ஒட்டி அதிகாலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 29 ந்தேதி ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபார நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

ஆகஸ்ட் 1ந்தேதி திருஆடிப்பூரத்தையொட்டி காலை 11 மணிக்கு சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பணம் மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நாகசதுர்த்தி விழா நடக்கிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு மங்கள இசை ,4 -45 மணிக்கு அபிஷேகம் ,அலங்காரம் ,மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஆகஸ்ட் 3 -ந்தேதி ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு சேஷாட அபிஷேகம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

5 ந்தேதி மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருஞானம் ,உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் ,மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் ,மகா தீபார நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11 ந்தேதி ஆடி மாத பௌர்ணமி பூஜையையொட்டி மாலை 6 மணிக்கு மகாதீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 12 ந்தேதி ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமஞ்சனம் ,உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் ,மாலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.ஆடிப்பெருக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்யு.எஸ்.எஸ். ஸ்ரீதர் செயல் அலுவலர் சி.தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News