உள்ளூர் செய்திகள்

பிரசார வாகனத்தை கலெக்டர் வினீத் கொடி அசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க வாகன வசதி

Published On 2023-04-22 07:01 GMT   |   Update On 2023-04-22 07:01 GMT
  • கலெக்டர் வினீத் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
  • எல்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

ஆதாரில் உள்ள விவரங்களின் (டெமோகிராபிக்) துல்லிய தன்மை தொடர ஆதார் ஆவணங்களை புதுப்பிக்கவும், ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க அடையாள சான்று மற்றும் முகவரிச்சான்று ஆவணங்களை பதிவேற்றவும் ஆன்-லைன் செயல்முறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் வினீத் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் யு.ஐ.டி.ஏ.ஐ. உதவி மேலாளர் தியாகராஜன், எல்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆதார் ஆவண புதுப்பித்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து 30 நாட்களுக்குள் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதார் ஆவண புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் பயிற்சியை தொடங்குகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு நேற்று முதல் வருகிற 30 நாட்களுக்கு பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆதார் ஆவணங்கள் புதுப்பித்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும் நாட்களில் பிரசார வாகனத்தில் கொடுத்து ஆதார் ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News