உள்ளூர் செய்திகள் (District)

வரதராஜ பெருமாள் கோவிலை படத்தில் காணலாம்.

வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

Published On 2022-07-24 07:06 GMT   |   Update On 2022-07-24 07:06 GMT
  • மழைக்காலங்களில் சாலையில் ஓடும் கழிவு நீர் மூலவர் கருவறை வரை சென்று விடுகின்றன.
  • கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே மூலனூரில் 150 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீதேவி பூமாதேவி வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, தும்பிகையாழ்வார், கருடாழ்வார், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் மூலனூர் ரோடு ஓரமாக உள்ளது. ரோடு மேம்படுத்தும் பணியால் உயர்த்தப்பட்டதால் இக்கோவில் தற்போது ரோட்டுக்கு கீழே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் ஓடும் கழிவு நீர் மூலவர் கருவறை வரை சென்று விடுகின்றன.

கோவில் வளாகம் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. மழைக்காலங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இக்கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு 1982 ஆம் ஆண்டும், ஸ்ரீதேவி பூமாதேவி வரதராஜ பெருமாளுக்கு 1988 ஆம் ஆண்டும், தும்பிக்கையாழ்வாருக்கு 1993 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக கல்வெட்டுகள் உள்ளன, தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கும், சனிக்கிழமை அன்று வரதராஜ பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அமாவாசை, பௌர்ணமி மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவில் வளாகத்திற்குள் நீர் புகுந்து கோவில் சுவர்கள் தரைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் கோவிலுக்குள் செல்வதற்காக ஹாலோ பிளாக் கற்கள் போட்டு அதன் மீது நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து இக்கோவிலை புதுப்பிக்க வேண்டுமாறு வெள்ளகோவில் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News