காங்கயம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் மே 17-ந் தேதி ஏலம்
- ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.
- மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
காங்கயம்:
காங்கயம் போலீஸ் நிலையம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் காவல் உட்கோட்டத்திற்குப்பட்ட காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்குகள் தொடர்பாக மொத்தம் 79 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவை காங்கயம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற மே 17-ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம். காங்கயம் போலீஸ் நிலையத்தில் 62 வாகனங்களும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் 17 வாகனங்களும் என மொத்தம் 79 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் அடுத்த மாதம் மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.