- உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
- கலைத்திருவிழாவில் பங்கேற்கும் மாணவிகள் சாலையில் திரளாக சென்றதைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தனர்.
உடுமலை:
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடுமலை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த 18 ந்தேதி முதல் இன்று வரை நடைபெறுகிறது. உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் சுமார் 400 மாணவிகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு பிரிவிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.நேற்று நடைபெற்ற 9-ம்,10 ம் வகுப்பிற்கான போட்டிகளில் மொத்தமாக 74 மாணவிகள் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ப. விஜயா ஆலோசனையின் பேரில் தமிழ் ஆசிரியர்கள் வே.சின்னராசு,ஆர். ராஜேந்திரன், ஆசிரியை வை.விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.கலைத்திருவிழாவில் பங்கேற்கும் மாணவிகள் சாலையில் திரளாக சென்றதைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தனர்.