உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

10-ம்வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரம்

Published On 2022-06-07 08:45 GMT   |   Update On 2022-06-07 08:45 GMT
  • முதற்கட்டமாகபிளஸ் 2 விடைத்தாள்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள், பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.
  • அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர்.


திருப்பூர்:

10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஜூன் 1ந் தேதி துவங்கியது.திருப்பூரில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது.10-ம்வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் திருப்பூர் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி மற்றும் உடுமலை ஸ்ரீனிவாசா மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் நடக்கிறது.

முதற்கட்டமாகபிளஸ் 2 விடைத்தாள்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள், பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.அதன்படி பணிகளில் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் வரும், 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளுக்காக, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது எனவும், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் (பொறுப்பு) கூறுகையில், 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த ஆயிரத்து 700 ஆசிரியர்களும், மேல்நிலை வகுப்புகளுக்கு ஆயிரத்து, 360 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.விடைத்தாள் திருத்தும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர் என்றார்.

Tags:    

Similar News