ஹோலி பண்டிகை கொண்டாட திருப்பூரில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்
- ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- திரும்பி வருவோம் என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட கிளம்பி செல்வதால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருப்பூர் மாநகரில் பனியன் தொழில் நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். நீண்டகாலம் திருப்பூரில் தங்கி இருந்து பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பண்டிகை காலங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு செலவது வழ்ககம். அந்த அடிப்படையில் வரும் 8 ஆம்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பணியாற்றும் பீகார், ஒடிசா, மேற்கு வங்க, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாரை சாரையாக சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறார்கள். இதனால் திருப்பூரில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில்வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை சென்று அங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்வதால், சென்னை செல்லும் ரயில்களிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஏறிச் செல்வதை பார்க்க முடிந்தது. ஹோலி பண்டிகை முடிந்ததும்திருப்பூரில் பணியாற்ற திரும்பி வருவோம் என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.