உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விவசாய பணிகளில் களமிறங்கிய வடமாநிலதொழிலாளர்கள்

Published On 2022-11-28 05:56 GMT   |   Update On 2022-11-28 05:56 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது.
  • வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் :

விவசாய குடும்பத்தை சேர்ந்த பல இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. அதேபோல விவசாய தொழிலாளர்களின் வாரிசுகளும் விவசாய பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் பனியன் நிறுவனங்களிலும், ஐ.டி., நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர். கணிசமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களை குத்தகைக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

சிறிய பண்ணைகளில் குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். பெரிய பண்ணைகளில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிக்க வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News