உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு விரைவு பஸ்களில் பார்சல் முன்பதிவுக்கு செல்போன் எண் அறிவிப்பு

Published On 2022-11-20 08:19 GMT   |   Update On 2022-11-20 08:19 GMT
  • கிலோவுக்கு நான்கு ரூபாய் வீதம் 20 கிலோவுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பார்சல் முன்பதிவுக்கு 94450 14435 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பார்சல் மற்றும் கூரியர் குறைந்த கட்டணத்தில் அனுப்புவதற்கான பார்சல் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக திருச்சி, மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கிலோவுக்கு நான்கு ரூபாய் வீதம் 20 கிலோவுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டத்துக்கான பார்சல் முன்பதிவு மையம் கோவையில் செயல்படுகிறது. கோவையில் இருந்து தமிழகம் முழுவதும் இயங்கும் விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 தாலுகா உள்ளது. பல்லடம், காங்கயம், அவிநாசி, தாராபுரத்துக்கு அதிக அளவில் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் வந்து செல்கிறது. ஆனால் மாவட்டத்தில் எந்த பஸ் நிலையத்திலும் விரைவு பஸ்களுக்கான பார்சல் முன்பதிவு மையம் இல்லை. டிக்கெட் முன்பதிவு செய்யவும் வழியில்லை.

பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து விடுகின்றனர். தனியார் கூரியர் நிறுவனம் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு வர்த்தக நகரான திருப்பூரில்எஸ்.இ.டி.சி., பஸ்களுக்கான பார்சல் முன்பதிவு மையம் உடனடியாக துவங்க வேண்டும்.

பார்சல் குறைந்த கட்டணத்தில் புக்கிங் செய்ய வழியில்லாதது குறித்து, கோவை கோட்ட எஸ்.இ.டி.சி., அதிகாரிகளிடம் கேட்ட போது, பார்சல் முன்பதிவுக்கு 94450 14435 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணுக்கு அழைத்தால் கிலோ எவ்வளவு, கோவையில் இருந்து எப்போது எந்தெந்த பகுதிக்கு பார்சல்களை அனுப்ப முடியும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் என்றனர்.

Tags:    

Similar News