குமரிக்கல்பாளையத்தில் உயா்மின் கோபுரத்துக்கான துணை மின்நிலையம் அமைக்க எதிா்ப்பு - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
- தமிழக தொல்லியல் துறையால் ஆய்வு செய்ய தோ்வு செய்யப்பட்டுள்ளது.
- நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயக்குமாா் தலைமையில் கவுத்தம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழக தொல்லியல் துறையால் ஆய்வு செய்ய தோ்வு செய்யப்பட்ட 32 இடங்களில் கவுத்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரிக்கல்பாளையமும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மிகவும் பழைமையான குமரிக்கல் உள்ளது. இந்த இடத்தில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் சாா்பில் உயா்மின் கோபுரத்துக்கான துணை மின்நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் துணை மின்நிலையம் அமைத்தால் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆகவே குமரிக்கல்பாளையத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் முயற்சிகளைக் கைவிட்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.