உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை

Published On 2023-03-10 07:07 GMT   |   Update On 2023-03-10 07:07 GMT
  • மார்ச், 13 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
  • 26 ஆயிரத்து 160 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, அரசு நியமித்த சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை யில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் மார்ச், 13 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 213 மேல்நிலை பள்ளிகளில் பயிலும், 25 ஆயிரத்து, 664 மாணவர், 496 தனித்தேர்வர் உட்பட, 26 ஆயிரத்து, 160 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 92 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவது, அதற்காக பணிகள், முதன்மை, துறை கண்காணிப்பாளருக்கான ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவ லகத்தில் இன்று நடந்தது.

இதில் பொதுத்தேர்வு க்கான சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கஜலட்சுமி தலைமையில் மாவட்ட தேர்வுத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொது த்தேர்வை எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மூலம் ஹால்டிக்கெட் வழங்க ப்பட்டது.

Tags:    

Similar News