திருப்பூர் மாவட்டத்தில் மாணாக்கர்களாக மாறி தேர்வு எழுதிய முதியவர்கள்
- கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 14 வட்டாரங்களில் 1,082 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூர் பள்ளி கல்வித்துறை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத, கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி (77), தாராபுரம் (108),குடிமங்கலம் (59),காங்கயம் (69),குண்டடம் (90), மடத்துக்குளம் (56),மூலனுார் (80),பல்லடம் (89), பொங்கலுார் (67),திருப்பூர் வடக்கு (78),தெற்கு (59), உடுமலை (105),ஊத்துக்குளி (65),வெள்ளகோவில் (80) உள்ளிட்ட 14 வட்டாரங்களில், 1,082 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இம்மையங்களில் கல்வி பயிலும், 19 ஆயிரத்து, 957 பேருக்கு நேற்று, அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது.
15 வயதுக்கு மேற்பட்டோர் என குறிப்பிட்டு இருந்தாலும், பெரும்பாலான மையங்களில், 40 முதல் 50 வயதை கடந்தவர்களே மாணவ,மாணவியராக மாறி வகுப்பறையில் அமர்ந்து தேர்வெழுதி அசத்தினர்.அனுப்பர்பாளையம் புதுார், பத்மாவதிபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தேர்வு பணிகளை ஒருங்கிணைத்தார்.