பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்
- மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெறுகிறது.
- 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு 3,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பல்லடம் :
பல்லடம் அரசு கலைக்கல்லூரியில்,2022--23ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நாளையும் 2 நாட்கள் நடைபெறுகிறது. பல்லடம் அரசு கலைக்கல்லுாரியில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 3,300 பெறப்பட்டுள்ளன.இளங்கலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று கல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில் காலை 9.30 மணி முதல் 10.30வரை மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டுத்துறை என, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 6-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கும்,தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.குறிப்பிட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் தரவரிசை அறிந்து கொள்ள, கல்லூரி இணையதள முகவரியை பார்வையிடலாம்.
சேர்க்கை பெற வரும் மாணவர்கள், அசல் டிசி,மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை,பாஸ்போர்ட் அளவு போட்டோ,ஜாதிச்சான்றிதழ், இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், தரவரிசை உள்ள கல்லூரி இணையதள பக்கத்தின் நகல், மூலச்சான்றிதழ் நகல் எடுத்து வர வேண்டும் இவ்வாறு கல்லூரி முதல்வர் முனியன் தெரிவித்தார்.