உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மனு கொடுத்த காட்சி.

மின் கட்டணத்தை குறைக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மனு

Published On 2022-08-22 10:48 GMT   |   Update On 2022-08-22 10:48 GMT
  • மாதம் 1.50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
  • தொழிலுக்காக பெற்ற முதலீட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏற்கனவே சிரமப்பட்டு வருகிறோம்.

பல்லடம் :

பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 'எல்.டி.சி.டி., மற்றும் எச்.டி., மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு டிமாண்ட், யூனிட் கட்டணம் உயர்வு மற்றும் 'பீக் ஹவர்ஸ்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.ஜி.எஸ்.டி., கொரோனா, விசைத்தறி கூலி பிரச்சினை, நூல்விலை உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், தொழிலை விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.தொழிலுக்காக பெற்ற முதலீட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏற்கனவே சிரமப்பட்டு வருகிறோம். மின் கட்டண உயர்வால், குறைந்தபட்சம், மாதம் 1.50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழல் உருவானால், வங்கிக் கடன்களை செலுத்த முடியாமல் நஷ்டத்தை சந்தித்து தொழிலை கைவிடும் நிலை ஏற்படும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில்,மின்சாரம் சார்ந்த மற்றும் சோலார் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. தொழிலை விரிவு படுத்துவதே அரசின் நோக்கம். விரைவில் தொழில்துறையினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய குறைந்த மின் கட்டண உயர்வு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த பதில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் நல்லதொரு தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News