உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
- 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.இதில் அவிநாசி சாலை, ஆஷா் நகா், தாராபுரம் சாலை, பி.என்.சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய 3 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சி 4 கிலோ, சாயமேற்றப்பட்ட கோழி இறைச்சி 3 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.மேலும், சுகாதாரமின்றி செயல்பட்ட 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.