உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - 27-ந் தேதி நடக்கிறது

Published On 2023-06-16 06:50 GMT   |   Update On 2023-06-16 06:50 GMT
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
  • DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திருப்பூர் ரெயில் நிலையம் முன் தலைமை தபால் நிலைய கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ளது. தபால் சேவையை பற்றி விவாதிக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரியில் DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News